அண்ணாமலை கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் அண்ணாமலையை கைது செய்து திகார் ஜெயிலுக்கு அனுப்புவோம் என கூறியதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.

அவர் அளித்த பதிலில், “2024ம் ஆண்டுக்குள் இந்தி கூட்டணியே இருக்காது அந்த கூட்டணி இருந்தால் தானே ஆட்சியைப் பிடிக்கும். இந்தி கூட்டணி கட்சி தலைவர்களிடையே தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில கட்சிகள் விரைவில் வெளியேறும், இந்தி கூட்டணியே காணாமல் போய்விடும். இந்தி கூட்டணி பிஸ்கட் மற்றும் டீ சாப்பிட மட்டும் தான் உதவும். 2024 தேர்தலுக்குள் ஆட்சியை இந்தி கூட்டணியை இருக்காது. அதன் பிறகு எப்படி ஆட்சியை பிடிப்பார்கள் என்னை கைது செய்து திகார் ஜெயிலில் வைப்பார்கள்” என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.