அண்ணாமலை – தமிழிசை திடீர் சந்திப்பு?

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் தமிழக பாஜக தலைவர் மற்றும் முன்னாள் புதுவை மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

அமித்ஷா கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் தமிழிசையை அழைத்து கண்டித்ததாக கூறப்பட்டது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலானது. ஆந்திராவிலிருந்து சென்னை திரும்பிய தமிழிசை செய்தியாளர்களிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் இது குறித்து விளக்கமளித்த போது, “அமித்ஷா எனக்கு சில அறிவுரைகள் கூறினாரே தவிர மிரட்டவில்லை” என்று கூறினார். தமிழிசையுடன் அண்ணாமலை திடீர் சந்திப்பு நடத்தியுள்ளார். முன்னாள் ஆளுநரும், தென் சென்னை பாஜக வேட்பாளராகவும் களமிறங்கிய தமிழிசையுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடீர் சந்திப்பு நடந்துள்ளது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை வருகை தந்ததாகவும் இருவரும் மனம்விட்டு சில நிமிடங்கள் பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.