அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து!

Filed under: அரசியல்,சினிமா |

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் அஜீத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இன்று நடிகர் அஜீத் குமார் தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அஜீத்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். மேலும் நடிகர் அஜீத்தின் “தீனா” உள்ளிட்ட பல படங்கள் தியேட்டர்களில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளன. அந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். நடிகர் அஜீத்குமாருக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், “தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு, எளிய பின்புலத்தில் இருந்து வந்து, தனது திறமையால் மக்களை கவர்ந்து, திரையுலகின் முக்கிய அடையாளங்களில் ஒருவராக உயர்நீதிருக்கும், நடிகர், சகோதரர் அஜீத்குமாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். இப்பதிவுக்கு அஜீத் ரசிகர்கள் கமெண்ட்டில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.