தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் தற்போது அண்ணாமலை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். நேற்று அமித்ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போதும் பாஜக அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது என்று தெரிவித்தார். இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம், “பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறினார்? அண்ணாமலையின் முகத்தில் அறைந்தது போன்ற அமித் ஷா ஜியின் பதில் கொடுத்தார். இப்பொது என்ன? ரோஷம் எங்கே? அண்ணாமலை ராஜினாமா செய்ய ரோஷம் இருக்கிறதா என்று முதலில் கேளுங்கள்?” என்று கேள்வியெழுப்பி உள்ளார்.