இன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது. இதையடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இத்தேர்வை ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் எழுதினர். செமஸ்டர் தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. சற்றுமுன் அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தவிர மூன்றாவது ஐந்தாவது ஏழாவது செமஸ்டர் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த முடிவுகளை மாணவர்கள் பார்த்து தங்கள் முடிவுகளை தெரிந்து கொண்டு வருகின்றனர்.