அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்!

Filed under: இந்தியா,தமிழகம் |

இந்திய ரிசர்வ் வங்கி அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வுக்கு உட்படுத்திய நிலையில் அதில் தமிழகம் முதல் இடத்திலும் தமிழகத்தை அடுத்து ஆந்திரா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களும் உள்ளது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த 2022-23 நிதியாண்டில், முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நிதி ஆண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம்தான் இருந்தது. 2020-21 நிதி ஆண்டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய தமிழ்நாடு, 2021-22-ல் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது.