அதிக வசூலை குவிக்கும் “சீதாராமம்!”

Filed under: சினிமா |

கடந்த வாரம் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “சீதாராமம்!” வெளிவந்த இரண்டாவது வாரத்திலேயே அதிக தியேட்டர்களில் வசூலில் குவித்துள்ளது.

“வாயை மூடி பேசவும்,” “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” உட்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் துல்கர் சல்மான். தொடர்ந்து தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது துல்கர் சல்மானின் “சீதாராமம்” திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸானது. படத்தை ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் துல்கருடன் ராஷ்மிகா மந்தனா, மிருனாள் தாகுர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீசான “சீதாராமம்” திரைப்படம் பாஸிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை குவித்து வருகிறது. தமிழகத்தில் இப்போது இப்படத்துக்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டுள்ளதாம். “சீதாராமம்” படத்தோடு வெளியான மற்ற படங்கள் எதுவும் அந்த அளவிற்கு ஓடவில்லை என்று கூறப்படுகிறது.