பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் இணைய இருப்பதாக செய்திகள் வெளியானதே என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லி தான் எனக்கே தெரிகிறது, அப்படி ஒருவேளை வந்தால் நானே உங்களுக்கு சொல்லி அனுப்புகிறேன் என்று தெரிவித்தார்.
கோவையில் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் என்பவர் பேட்டியில், “நான் பாஜகவில் சேர போவதாக வதந்திகள் பரப்பி வருகிறார்கள். அது முழுக்க முழுக்க தவறான தகவல். பின்னர் பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்கள் தான் அதிமுகவுக்கு வரப் போகிறார், இன்னும் இரண்டு மணி நேரத்தில் அந்த இணைப்பு நடைபெறும்” என்று தெரிவித்தார். பாஜகவுக்கு தமிழகத்தில் மொத்தம் நான்கு எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் யார் அந்த இரண்டு எம்எல்ஏக்கள் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலில், “நீங்கள் சொல்லி தான் எனக்கே தெரிகிறது. இதை யார் கூறினார்கள்? ஒருவேளை அவ்வாறு வந்தால் உங்களுக்கு நான் தகவல் அனுப்புகிறேன், வந்தால் சந்தோஷம் தான்’” என்று கூறினார்.