தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அதிமுகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்கு கொண்டுவர தீவிர முயற்சி செய்தார். அதிமுக பிடிவாதமாக பாஜகவுடன் கூட்டணியில்லை என உறுதிபட கூறிவிட்டது.
அடுத்த கட்டமாக பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமாக கட்சி இணைய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் அதையடுத்து மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை ஜிகே வாசன் எடுப்பார் என்றும் அதன் பிறகு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணி சார்பில் அண்ணாமலை உள்ளிட்ட ஒரு சில தலைவர்கள் பேசுவதை விட ஜிகே வாசன் பேசுவது பொருத்தமாக இருக்கும் என பாஜக மேலிடம் கருதுவதாகவும் அதனால் அரசியல் கட்சிகளை கூட்டணிக்கு கொண்டு வரும் பொறுப்பை ஜிகே வாசன் ஏற்று கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஜிகே வாசன் முயற்சியால் பாஜக கூட்டணிக்கு எத்தனை அரசியல் கட்சிகள் வரும் என்பது பேச்சுவார்த்தை முடியும் தறுவாயில்தான் தெரியும்.