அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகள்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சென்னை மாநகர காவல்துறை இன்று நடைபெற உள்ள அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு 23 நிபந்தனைகளை விதித்துள்ளது. உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட வேண்டும், போராட்டம் நடத்தும் இடத்திற்கு எந்த காரணத்தை கொண்டும் வாகனங்களை கொண்டுவரக்கூடாது, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் ஆகிய நிபந்தனைகள் முக்கியமானது.

மேலும் காவல் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் உண்ணாவிரதம் இருக்க வேண்டும், அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகளை தாக்கி பேசவோ, முழக்கம் எழுப்பவோ கூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் 23 நிபந்தனைகளை மீறி உண்ணாவிரத போராட்டக்காரர்கள் நடந்து கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று சட்டமன்றத்தில் சபாநாயகர் அப்பாவு அவர்கள் அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து இன்று அதிமுகவினர் உண்ணாவிரதம் இருக்கும் நிலையில் அந்த உண்ணாவிரதத்திற்கு அனுமதி அளித்த காவல்துறை அதற்கு நிபந்தனையும் விதித்துள்ளது. காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் அதிமுக தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.