சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடந்தாண்டு கரூர் வேலுசாமிபுரத்தில் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தியதாகவும் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கு கரூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி 11 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்பட 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.