புதிய நீதிபதி அதிமுக பொதுக்குழுவின் வழக்கை விசாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நீதிபதி கிருஷ்ணசாமி அவர்கள் அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரித்த நிலையில் அவ்வழக்கில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளிவந்தது. இவ்வழக்கில் நீதிபதியை மாற்ற வேண்டுமென்று அதிமுகவின் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்ததை அடுத்து நீதிபதி விலகி விட்டார். தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்க புதிய நீதிபதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.