அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு..!’ – தினகரனின் கனவுக்கு ஆப்பு வைத்த சசிகலா!
அமமுக வேட்பாளர்களுக்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்று டிடிவி தினகரன் கொடுத்த அழுத்தமே, ‘அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்..’ என சசிகலாவை அறிக்கை வெளியிடச் செய்தது. ஆனாலும், பத்திரிகையாளர்களிடம் தினகரன் ‘எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவருடைய மனசாட்சியாக நான் பேசவும் முடியாது.’ என்று விளக்கம் அளித்துவிட்டு, ‘ஏன் ஒதுங்கி இருக்க வேண்டும்? அரசியலில் இருந்தபடியே நடவடிக்கை எடுக்கலாமே?’ என்று சின்னம்மாவிடம் வலியுறுத்தியதாக, தனது கட்சியினரிடம் கூறி சமாளித்துள்ளார்.
இந்நிலையில், சித்தியைப் பகைத்துக்கொள்ள விரும்பாத தினகரன், அவரைக் ‘கூல்’ செய்யும் விதமாக ‘நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்கிறேன்..’என்று சமாதானம் செய்ய முயற்சித்தபோது, தனது ஆலோசனையை, ஆத்திர வார்த்தைகளில் கொட்டியிருக்கிறார் சசிகலா.
‘நான் ஜெயில்ல இருந்தப்ப என்ன சொன்னேன்? எம்.பி. எலக்ஷன்ல கான்சன்ட்ரேட் பண்ணாத.. எம்.எல்.ஏ. (இடைத்தேர்தல்) எலக்ஷன்ல மட்டும் கான்சன்ட்ரேட் பண்ணுன்னு சொன்னேன். நான் சொன்னத நீ கேட்கல. உன்ன நம்பி வந்த 18 எம்.எல்.ஏ.க்களுக்கு உன்னால நல்லது பண்ண முடியல. நான் சொன்னதக் கேட்டிருந்தா பதினெட்டுல 12 பேராச்சும் ஜெயிச்சு எம்.எல்.ஆயிருப்பாங்க. ஆட்சியும் கவிழ்ந்திருக்கும். ஆனா.. நீ என்ன பண்ணுன? கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதிய ஒதுக்கிட்டு, 38 தொகுதியில உன் கட்சி நின்னுச்சு. ஆனா.. ஒரு இடத்துல கூட ஜெயிக்கல. இதுனால திமுகவுக்கு லாபம்; அதிமுகவுக்கு நஷ்டம்.
இனியும், தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் ஆகணும்னு கனவு காணாத. மொதல்ல அந்த நெனப்ப தூக்கி குப்பையில போடு. ‘234 தொகுதிலயும் போட்டியிடுவோம். என் தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளைக் கூட்டணில சேர்த்துக்கிறேன். நான்காவது அணி அமைக்கப்போறேன்’னு வீரவசனம் பேசுறத நிறுத்து. இப்பவாச்சும் சொல்லுறதக் கேளு. எம்.பி. எலக்ஷன்ல உன் கட்சி முப்பதாயிரத்துக்கு மேல ஓட்டு வாங்கின தொகுதிகள் எத்தனை இருக்குன்னு பார்த்து, அதுல 50 தொகுதிகளை மட்டும் செலக்ட் பண்ணி வேட்பாளர்களை நிறுத்து. அதுவும் நல்ல வேட்பாளரா.. ஊருக்குள்ள நல்ல பேரு வாங்கியிருக்கிற ஆளைப் பார்த்து நிறுத்து. வேற எந்த ஆணியும் நீ பிடுங்க வேணாம்.’ என்று கூற, பவ்வியமாகத் தலையாட்டிவிட்டுச் சென்றாராம் டிடிவி.தினகரன்.
சித்தியின் பாசத்துக்கும் ஆலோசனைக்கும் எந்த அளவுக்கு மதிப்பளிக்கப் போகிறாரோ தினகரன்?