அனுஷ்காவின் 50வது படத்தின் இயக்குனர் யார்?

Filed under: சினிமா |

நடிகை அனுஷ்கா தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த “அருந்ததி,” “ருத்ரமாதேவி” போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அனுஷ்கா கடைசியாக “பாகுபலி” திரைப்படத்தில் நடித்த பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார். கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்போது அனுஷ்கா இப்போது தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 2010ம் ஆண்டு “வேதம்” என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.