“அன்னப்பூரணி’’ படத்தின் புதிய அப்டேட்

Filed under: சினிமா |

“அன்னப்பூரணி” திரைப்படம் நயன்தாராவின் 75வது படம். இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா திருமணத்துக்குப் பின் நடித்த “கனெக்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அவர் அட்லி இயக்கும் “ஜவான்” படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா 75 என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. நயன்தாரா 75வது படத்தின் -தலைப்பு வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு “அன்னப்பூரணி” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஹீரரோவாக ஜெய் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். இப்படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். ஜீ ஸ்டூடியோ நிறுவனம் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள “அன்னப்பூரணி” படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.