அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே அமைச்சர்களுடன் உரையாட அனுமதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டில்லி மதுபான கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமீபத்தில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படும் மனு நீதிமன்றத்தில் விசாரணைகள் உள்ளது. டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே அமைச்சரபையுடன் காணொளியில் உரையாட அனுமதிக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்தார். இம்மனுவை டில்லி உயர்நீதிமன்ற தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் தார்மீக ரீதியில் தொடரக்கூடாது என்று பாஜக உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறிவரும் நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தில் இல்லை என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.