நடிகை அமலா பால் “சிந்து சமவெளி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். இவர் “மைனா” படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவரானார். இடையில் அவர் திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்தார்.
தொடர்ச்சியாக துணிச்சலான மற்றும் சர்ச்சையானக் கதாபாத்திரங்களாகவே தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆனால் இப்போது முன்புபோல அவருக்கு அதிக வாய்ப்புகள் இல்லை. இதையடுத்து அவர் நடித்த “கடாவர்” என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி சிறிய அளவில் கவனம் பெற்றது. சில மாதங்களுக்கு முன் அமலா பால் தன்னுடைய பிறந்தநாளில் அவரின் புதுக்காதலரை அறிமுகம் செய்தார். ஜெகத் தேசாய் என்பவருடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இந்த காதலை வெளிப்படுத்தி இருந்தார். அதன் பின்னர் நவம்பர் மாதத்தில் ஜெகத் தேசாயைக் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்தனர். இப்போது தான் கர்ப்பமாக இருப்பதை நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.