அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து வெளியேறிய பொன்முடி!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை அலுவலகத்தில் 5 மணி நேர விசாரணைக்கு பின் வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமலாக்கத்துறை சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு விசாரணையில் நவம்பர் 30ம் தேதி ஆஜராக வேண்டுமென அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை அமைச்சர் பொன்முடி ஆஜரானார். அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனையின் போது எடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. 5 மணி நேர விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து அமைச்சர் பொன்முடி வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.