இன்று அமெரிக்காவின் சிகாகோவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலையிலுள்ள பார்மர்ஸ்வில்லில் நகருக்கு இல்லினாய்ஸ் மகாணத்தில் நிறைய வாகனங்கள் சென்று கொண்டிருந்தன.
அப்போத், இன்டர்ஸ்டேட் 55 நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த புழுதிப் புயல் வீசியது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு தூசிகள் பறந்து நெடுஞ்சாலையில் பரவியது. இதில், வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கின. 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு லாரி, கார்கள், பஸ்கள் என நூறுக்கணக்கான வாகனங்கள் மோதியதில் இரண்டு லாரிகளில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் 6 பேர் பலியானதாகவும், 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகும் நிலையில் இப்பகுதிக்குச் சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்விபத்தினால் அங்கு போக்குவரத்து பாதித்தது.