ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
திரைப்படம் வரலாறு காணாத வசூலை பெற்றதையடுத்து ரஜினிகாந்த், நெல்சன் ஆகிய இருவருக்கும் சொகுசு காரை கலாநிதி மாறன் பரிசாக கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த்துக்கு லாபத்தில் கிடைத்த பங்கையும் பகிர்ந்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகின. திரையரங்குகளில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படம் செப்டம்பர் 7ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கை போல் ஓடிடியிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.