அமைச்சரின் பதிலால் பொதுமக்கள் அதிருப்தி!

Filed under: அரசியல்,இந்தியா |

பொதுமக்கள் கேரளாவில் அறிவிக்கப்படாத மின்தடை அடிக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஒருவர் “முன்பெல்லாம் வீட்டுக்கு ஒரு ஏசி இருந்தது ஆனால் இப்போது வீட்டுக்கு நான்கு ஏசி உள்ளது அதனால் தான் மின்தடை ஏற்பட்டது” என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி மின்தடை குறித்து கூறும்போது, “மின்சாரம் பயன்படுத்துவதில் பொதுமக்கள் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் ஒரு வீட்டில் ஒரு ஏசி இருந்த நிலையில் தற்போது நான்கு ஏசிகள் உள்ளன. குறிப்பாக அதிக மின்சாரம் உபயோகப்படுத்தப்படுவதால் மின்தடை ஏற்படுகிறது. இதனால் டிரான்ஸ்பார்மர் ட்ரிப் ஆகிறது. மேலும் மின் உற்பத்தியும் குறைவாக இருக்கிறது. ஒருநாள் மின்சாரத்திற்காக 15 கோடி ரூபாய் செலவு செய்து வெளியிலிருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. புதிய மின் உற்பத்தி திட்டத்திற்கு கேரளாவில் யாரும் ஒத்துழைப்பு தருவதில்லை. கேரளாவில் 3000 டிஎம்சி தண்ணீர் இருந்தும் 300 டிஎம்சி தண்ணீர் உபயோகித்து தான் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் பத்தாம் தேதிக்குள் மழை இல்லை என்றால் மின்தடையை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று அமைச்சர் கிருஷ்ண குட்டி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது