நீட் தேர்வினால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைக்கு தூண்டுவது அமைச்சர்கள்தான் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு. மத்திய அரசின் தேர்வு குழுமம் இரவு நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருப்பது குறித்து கவனித்திருக்க வேண்டும். இதனால் மாணவ மாணவிகள் அனைவரும் இரவு நேரத்தில் முடிவுகளைப் பார்க்கும்போது ஆதரவாளர் அருகில் இல்லாத சூழல் நிலவி இருக்கலாம். அதனால் தற்கொலை முடிவு செய்திருக்கலாம்” என்று கூறினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “எந்த ஒரு மாநிலத்தின் முதலமைச்சரும் நீட் தேர்வை எதிர்க்காதபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டும் எதிர்ப்பது ஏன்? மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டுவது அமைச்சர்கள்தான்” என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.