கடந்த ஐந்து நாட்களாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி தமிழகத்திலுள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களான காசா கிராண்ட் மற்றும் அப்பாசாமி நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடந்து வருகிறது.
ஒரு பக்கம் சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம், “இந்த சோதனைகளுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். நாடாளுமன்ற தேர்தல் அச்சம் காரணமாக வருமான வரி சோதனை மூலம் எங்களுக்கு அச்சுறுத்தல் தரப்படுகிறது. காசா கிராண்ட், அப்பாசாமி நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நானும் திமுகவினரும் எதற்கும் பயப்பட மாட்டோம்” என்று கூறினார்.