ரேசனில் விரைவில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பொங்கலை முன்னிட்டு ரேசன் கடைகளில் சிறப்பு தொகுப்புகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பயோமெட்ரிக் வேலை செய்யாத இடங்களில் கண் கருவிழி மூலம் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.