சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக சென்னையின் பல இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து பேட்டியளித்த மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் மின் நுகர்வு அதிகம் உள்ள இடங்கள் கணக்கெடுக்கப்பட்டு மின்விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் 4016 மெகாவாட் ஆக மின் நுகர்வு அதிகரித்துள்ளது. 45 நாட்களில் 19,387 மெகாவாட் ஆக அதிகரித்துள்ளது, மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
Related posts:
அவர்களிடம் இருப்பது பணபலம், நம் கூட்டணியில் இருப்பது மக்கள் பலம் :மண்ணின் மைந்தன் சந்திரமோகனை அமோக வ...
நெல்லையில் மீண்டும் பரபரப்பு. பந்தல் ராஜா ஒட்டிய வால் போஸ்டர் ஒட்டுமொத்த வெள்ளாளர் சமுதாய மக்களும் த...
தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்தது இலங்கைக் கடற்படை.
பாஜகவுக்கு சென்ற வி பி துரைசாமிக்கு பெரிய பதவி காத்திருக்கிறது! அமித்ஷாவின் திட்டம்!