அமைச்சர் தந்தையின் மறைவுக்கு- முதலமைச்சர் இரங்கல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தந்தை முத்தூர்.சா.பெருமாள்சாமி மறைவையொட்டி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அச்செய்தியில், “தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான மு.பெ.சாமிநாதனின் அருமைத் தந்தை முத்தூர். சா.பெருமாள்சாமி மறைந்த செய்தியறிந்து வருந்தினேன். தந்தையை இழந்து தவிக்கும் மு.பெ.சாமிநாதனை தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன். அப்போது, 94 ஆண்டுகளைக் கடந்து நிறைவாழ்வு வாழ்ந்த தன் தந்தை, அவரது இறுதி மூச்சுவரை உழவராக வாழ்ந்ததைக் குறிப்பிட்டார். பெருமாள்சாமி அவர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மீண்டும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.