அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என பேசியுள்ளார்.
வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரித்து துரைமுருகன் கடந்த சில நாட்களாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார், இன்று அவர் செய்தியாளர்களிடம், “நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளார்கள், பிரதமர் தமிழகத்திற்கு வருவதால் எந்த மாற்றமும் ஏற்படாது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி அலை வீசுகிறது. வட மாநிலங்களில் இந்தியா கூட்டணி அலை வீசுகிறது. நிச்சயம் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டுபவர் தான் இந்தியாவின் அடுத்த பிரதமர். வேட்டி கட்டியவர் கை காட்டும் ஒருவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதமராக வர முடியும்” என்று அவர் பேசினார்.