அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் கருத்து!

Filed under: அரசியல்,தமிழகம் |

தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இந்தியாவின் கடன் அதிகமானது என கூறியுள்ளார்

சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் கடன் அதிகமானது குறித்து குற்றம் சாட்டியிருந்தார். கடனை ரூபாயில் கணக்கிடாமல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதாவது ஜிடிபியில் தான் கணக்கிட வேண்டும். அவ்வாறு கணக்கு பார்த்தால் தமிழ்நாடு அரசு கடன் ஜிடிபி யில் 27% தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஆனால் மத்திய அரசின் கடன் ஜிடிபி யில் 60 சதவீதம் இருக்கிறது என்றும் பாஜக ஆட்சிக்கு வந்த போது தான் கடன் அதிகமாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.