விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சோலார் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி திருவாரூர் மாவட்டத்தில் விரைவில் சோலார் திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக பதிலளித்தார். அதுமட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர இருப்பதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.