அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு 6ம் தேதி தீர்ப்பு!

Filed under: அரசியல்,தமிழகம் |

சிறப்பு நீதிமன்றம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 6ம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது.

கடந்த 1996&-2001ம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பொன்முடி இருந்த போது தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சைதாப்பேட்டையில் 3,360 சதுர அடி நிலத்தை போலி ஆவனம் தயாரித்து மாமியார் பெயரில் பதிவு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போதே பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சார் பதிவாளர் புரு பாபு, சைதை கிட்டு ஆகியோர் உயிரிழந்தனர். பொன்முடி உள்பட மற்ற 7 பேர் மீதான வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜரத்தினம் உள்பட 90க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் அரசு தரப்பில் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்ததது. இவ்வழக்கில் வரும் 6ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் வெளியாக இருக்கும் தீர்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.