அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். இச்சோதனை எதற்காக என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பொன்முடி கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012ம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு முன் பொன்முடி மீது பதியப்பட்ட வழக்கில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Related posts:
திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம்.. அதிர்ச்சியில் மநீம.. கடும் அப்செட்டில் கமல்!
இப்போதைக்கு சசிகலா வெளியே வர வாய்ப்பில்லை.. ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி.
போதைப்பொருள் புழக்கம் குறித்து எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!
மத்திய அரசின் மகளிர் சேமிப்பு திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டப் பரிசு.



