அமைச்சர் அக்னிபாத் நேர்காணலில் ஜாதி, மதம் கேட்கப்படுகிறதா? என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்திற்கு ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இத்திட்டத்தில் சேரும் இளைஞர்களிடம் ஜாதி மற்றும் மத சான்றிதழ்கள் கேட்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. “அக்னிபாத் திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக ஜாதி மதம் சான்றிதழ்களை கேட்கவில்லை. எதிர்க்கட்சிகள் கூறுபவை அனைத்து பொய்யான தகவல்” என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கமளித்துள்ளார்
தேவைப்பட்டால் மட்டுமே ஜாதி சான்றிதழ் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை ராணுவத்தில் எப்போதும் இருந்து வருகிறது. சுதந்திர காலத்துக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்த நடைமுறை இருப்பதாகவும் தற்போதும் அதே நடைமுறையை தொடர்வதாகவும் இராணுவ அதிகாரிகள் இதுகுறித்து விளக்கம் அளித்தனர்.