அமைச்சர் நாசர் ஆவின் பொருட்களில் ‘ஹலால்’ வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பதை குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தை இருப்பது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், “‘ஹலால்’ என்ற வார்த்தை இருந்தால் மட்டுமே வெளிநாட்டில் விற்பனை செய்ய முடியும். அதனால்தான் அந்த வார்த்தை அச்சிடப்பட்டுள்ளது. ஹலால் என்ற வார்த்தை அச்சிடும் நடைமுறை கடந்த அதிமுக ஆட்சியிலிருந்து தொடர்கிறது” என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், முன்னதாக ஆவின் பொருட்களில் ஹலால் என்ற வார்த்தையை அச்சிடப்பட்டு இருந்ததால் அதை புறக்கணித்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியது. இதனால் அமைச்சர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.