அரசுப் பேருந்து ஓட்டுனரை அரிவாளரால் தாக்கிய நபர்கள் பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்றிரவு அம்பாசமுத்திரம் அருகே வீரவ நல்லூரியில் கல்லிடைக்குறிச்சி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த அரசு பேருந்தை சிலர் வழிமறித்துள்ளனர். ஓட்டுனர் ரெஜின் சிறிது தூரம் தள்ளி பேருந்தை நிறுத்தியுள்ளர் என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த நபர்கள் ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த வாக்குவாதம் முற்றி, அவர்கள் ஓட்டுனர் ரெஜினை அரிவாளார் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பாபநாசம் பணமனை போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அப்போராட்டம் கைவிடப்பட்டது.
Related posts:
நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.12.49 கோடி மதிப்பீட்டில் புதிதாக 59 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டிடம் ...
பிடிஆர் ஆடியோ குறித்து செல்லூர் ராஜூ கருத்து!
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ‘விக்ரஹா’ அதி நவீன ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் ...
சாம்சங் கேலக்சி பயனாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!