கேரள மாநில சாலை போக்குவரத்து கழகம் ஜனவரி முதல் அரசு பேருந்துகளில் டிஜிட்டல் மூலம் டிக்கெட் வாங்கும் முறை வரும் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இனி அரசு பேருந்துகளில் டிக்கெட் பெற கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளில் க்யூ ஆர் கோடுகள் மூலமாகவும் பேருந்தில் டிக்கெட் செலுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநில போக்குவரத்துத்துறை இது குறித்து, “டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கு டிஜிட்டல் டிக்கெட் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த சலோ ஆப் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலியில் பேருந்து ட்ராக்கிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளது. பேருந்து இருப்பிடத்தை கண்டறிய பயணிகளுக்கு உதவும். பயண டிக்கெட் மட்டுமின்றி சீசன் டிக்கெட் மற்றும் இலவச பாஸ் குறித்த துல்லியமான தகவல்களையும் இந்த செயலியில் தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி டிசம்பர் மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும். ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த படும்” என்று அறிவித்துள்ளது.