ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டில்லியின் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் “பாஜகவுக்கு மாற்று நாங்கள்தான்” என்று கூறியுள்ளார்.
பாஜக கட்சி கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்தது. 2019ம் ஆண்டும் தொடர்ச்சியாக இரண்டாம் முறையும் வென்று மத்தியில் ஆட்சி அமைத்தது. பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்புகளும் விமர்சனங்களும் தெரிவிக்கின்றனர். ஆனாலும், நாட்டிலுள்ள பல மாநிலங்களில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கிறது. பாஜகவுக்கு அடிபணியாதவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை விட்டு பயமுறுத்துவதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு தொடர்பாக டில்லி துணை முதலமைச்சர் மணீஸ் சிசோடியா மீது சிபியை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கூறி வருகிறது. டில்லியில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோரும் தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார். தற்போது டில்லி சட்டசபையில், 70 இடங்களில் 62ல் ஆம் ஆத்மி உள்ளனர். பாஜவுக்கு 8 எம்எல்ஏக்கள் உள்ளனர். நேற்று இந்த தீர்மானத்தின் போது, நடந்த விவாதத்தில் பாஜவினர் வெளி நடப்பு செய்தனர். இதுகுறித்து கெஜ்ரிவால், தேசிய கட்சிகளான ஊழல் செய்யும் பாஜக மற்றும் நேர்மையான கட்சி ஆம் ஆத்மியும்தான் உள்ளன. பாஜவுக்கு போட்டியாக ஆம் ஆத்மிதான் உள்ளது என கூறியுள்ளார்.