காந்தி டாக்ஸின் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம்தான் இது.
விஜய்சேதுபதி தன் கைவசம் 10 திரைப்படங்கள் வைத்துள்ளார். அதில் 3 இந்தி படங்களும் அடக்கம். இப்போது அவர் மௌனப்படமாக உருவாகும் “காந்தி டாக்ஸ்” திரைப்படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங்க் பெலேகார் இயக்குகிறார்.
கடந்த ஆண்டே இத்திரைப்படம் அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இப்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நகைச்சுவை கேலி திரைப்பரமாக உருவாக உள்ளது. இதற்கு முன்னர் சமீபத்தில் பேசும்படம் மற்றும் மெர்க்குரி ஆகிய மௌனப் படங்கள் ரிலீஸானது குறிப்பிடத்தக்கது.