அரியலூர் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம்!

Filed under: தமிழகம் |

ராம்சார் சர்வதேச அங்கீகாரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி, நீலகிரியிலுள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் பட்டியலில் கரைவெட்டி சரணாலயம் உட்பட மேலும் 5 இந்திய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் ராம்சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களில் எண்ணிக்கை தற்போது 15 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரிலுள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.