தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் நடிகர் அர்ஜுன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவர் சில படங்களை இயக்கியும் உள்ளார். தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அறிமுகப்படுத்த ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார்.
ஆனால் அந்த படத்தின் கதாநாயகனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அப்படம் தொடங்கப்படவில்லை. இப்போது அதே படத்தை உபேந்திராவின் அண்ணன் மகன் நிரஞ்சனைக் கதாநாயகனாக்கி இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க சத்யராஜை ஒப்பந்தம் செய்துள்ளாராம் அர்ஜுன். படத்தில் சத்யராஜ், கதாநாயகியின் அப்பா வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.