அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து!

Filed under: இந்தியா |

அலகாபாத் நீதிமன்றம் போக்சோ சட்டத்தை சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் இதனால் அப்பாவிகள் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

போக்சோ மற்றும் எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் பெண்கள் பொய் புகார்கள் பதிவு செய்கின்றனர் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 2011ம் ஆண்டில் பெண் ஒருவர் தொடர்ந்த பொய்யான பாலியல் வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மாநில அரசிடமிருந்து நிவாரணம் பெறவும் அப்பாவியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் ஆயுதமாக போக்சோ சட்டத்தை ஒரு சில பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர். அதேபோல் எஸ்.சி, எஸ்.டி வன்முறை தடுப்புச் சட்டத்தையும் ஒரு சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளார்.