வரும் 24 ஆம் தேதி அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வர் கோவிலில் திருப்பணி தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் அவினாசியிலுள்ள கருணாம்பிகை உடனமர் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவில் ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்ற தலமாகவும், காசிக்கு நிகரான கோவில் என்று கூறப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான நாயனார் பதிகம் பாடிய சிறப்பு பெற்ற தலமிது. இந்த நிலையில், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 14 ஆண்டுகள் ஆகிறது. எனவே திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. வரும் 24ம் தேதி காலை 7 மணிக்கு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.
Related posts:
ஆன்லைனில் வகுப்புகள் எடுப்பது பற்றி இரண்டு நாட்களில் முடிவு அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன்!
ஜெயலலிதா பிறந்தநாளை அன்னதானம்- நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதி வழங்கினார்.
முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
தந்தை பாணியில் பேசிய விஜய பிரபாகரன்..!!



