ஆகஸ்ட் 23ம் தேதி தேசிய விண்வெளி தினம்!

Filed under: இந்தியா |

கடந்த 23ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. இந்நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

அதன்படி ஆகஸ்ட் 23ம் தேதியை தேசிய விண்வெளி தினமாக கொண்டாட, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இக்கூட்டத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சந்திரயான் – 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதில், பெண் விஞ்ஞானிகள் பெருமளவில் பங்காற்றியதற்கு பாராட்டு தெரிவித்த அமைச்சரவை கூட்டம், இது அடுத்த தலைமுறை பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் திட்டத்தால் தான் இந்திளய விண்வெளி வெற்றிகரமாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.