சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் த.செ.ஞானவேல் இயக்கும் “வேட்டையன்” திரைப்படத்தில் இப்போது நடித்துக் கொண்டிருக்கிறார். படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.
படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரம் மற்றும் திருநெல்வேலியில் நடக்க, இரண்டாம் கட்ட ஷூட்டிங் மும்பையில் படமாக்கப்பட்டது. அங்கே அமிதாப் பச்சன் நடிக்கும் காட்சிகளை படமாக்கியுள்ளது படக்குழு. அதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. படம் அக்டோபரில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பஹத் பாசிலும் நடித்துள்ளார். அவர் படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் பற்றி ஒரு ஆச்சர்ய தகவலைப் பகிர்ந்துள்ளார். அதன்படி படத்தில் பஹத் பாசில் ஒரு நகைச்சுவை வேடத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் நகைச்சுவை காட்சிகள் ரஜினியோடு இணைந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.