ஆதித்யா எல்- 1 எடுத்த போட்டோ!

Filed under: இந்தியா,உலகம் |

ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்துக் கொண்டுள்ளது

சந்திரயான், மங்கள்யான் திட்டங்கள் மூலம் நிலவிலும், செவ்வாய் கிரகத்திலும் கால் பதித்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ உலக அரங்கில் பெரும் சாதனையை படைத்து வருகிறது. அதை தொடர்ந்து அடுத்த கட்டமாக சூரியன் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆதித்யா திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி சூரியன் குறித்த ஆய்வுக்காக ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்த 2ம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசைக்கும், சூரியனின் ஈர்ப்பு விசைக்கும் இடையேயான லெக்ராஞ்சியன் பாயிண்ட் என்ற பகுதியில் நிலையாக நின்று தனது ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. தற்போது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுவட்டபாதை தூரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தன்னை தானே எடுத்த செல்பி புகைப்படத்தை ஆதித்யா எல்-1 அனுப்பியுள்ளது. இது விண்கலம் எந்த வித பாதிப்புமின்றி சென்றுக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. மேலும் தொலைவிலிருந்து பூமியையும், நிலவையும் போட்டோ எடுத்து அனுப்பியுள்ளது ஆதித்யா எல்-1. இந்த புகைப்படங்கள் தற்போது இஸ்ரோ வெளியிட்டுள்ள நிலையில் வைரலாகி வருகிறது.