ஆதிபுரூஸ் ரூ.340 கோடி வசூல்

Filed under: சினிமா |

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான “ஆதிபுரூஸ்” திரைப்படம் 3 நாட்களில் உலகம் முழுதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.340 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் ஓம் ராவட் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் “ஆதிபுரூஸ்.” படத்தில் பிரபாஸ் ராமராகவும், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். இப்படம் ரூ.600 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. பான் இந்தியா படமாக நேற்று இப்படம் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடித்த ’ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் காட்சிகள் சரியில்லை என்று கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இருப்பினும் பிரபாஸின் ரசிகர்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர். “ஆதிபுரூஸ்” படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.88 கோடி வசூலித்து, இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் “ஆதிபுரூஷ்” படம் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. ஏற்கனவே “ஆதிபுரூஸ்” படம் டிஜிட்டல், மியூசிக் வெளியீட்டு உரிமை ஆகியவை மூலம் ரூ.247 கோடி வசூலீட்டியதாக பாலிவுட் ஹங்கமா கூறியது. “ஆதிபுரூஸ்” திரைப்படம் வெளியான 3 நாளில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் ரூ.340 கோடி வசூல் குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், படக்குழுவினரும், பிரபாஸ் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.