மின்சார வாரியம் ரூ.2000 மின்கட்டணம் வந்தால் இனிமேல் நேரடியாக அலுவலகம் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாது என்று கூறப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது ரூபாய் 5000 மற்றும் அதற்கு மேல் மின் கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்தாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்தி வருகின்றனர். ரு.5000க்குள் மின்கட்டணம் உள்ளவர்கள் நேரடியாக மற்றும் ஆன்லைனில் ஆகிய இரண்டின் வழியாகவும் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் தொகையை 2000 ஆக குறைக்க மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது. இதனை அடுத்து 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இனி மின்கட்டணம் வருபவர்கள் நேரடியாக அலுவலகம் சென்று மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.