சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டத்திற்கு அம்மாநில அரசு அதிரடியாக தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்கவேண்டும் என்று பல அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தீஸ்கர் மாநில சட்டசபையில் அனைத்து வகையான ஆன்லைன் சட்டத்திற்கு தடை விதித்து சட்ட மசோதா இயற்றப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் நேற்று சட்டப்பேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி பொது இடங்களில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு 6 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர் மாநில கவர்னர் இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என்று கூறப்படுகிறது.