ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு இளைஞர் பலியாகி உள்ளார். இந்த இளைஞர் காவிரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
கவர்னருக்கு தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற மசோதா இயற்றப்பட்டு அந்த மசோதா அனுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவ்வகையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மியில் செல்போன் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை முழுவதையும் இழந்துள்ளார். இதையடுத்து மனமுடைந்தவர் வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று திடீரென வாகனத்தை காவிரியாற்றின் பாலத்தில் நிறுத்திவிட்டு, ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக தாமதிக்காமல் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.