கடந்த 5 நாட்களாக ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டண வசூல் புகாரளிக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி சோதனை நடந்து வருகிறது.
போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இதுவரை சுமார் 13 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு செய்து வருவதாகவும், விதிமீறலில் ஈடுபட்டதாக 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 119 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்தும், ரூ.36.95 லட்சம் அபராதம் விதித்தும் நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொடர் விடுமுறை என்பதால் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கிட்டத்தட்ட இரு மடங்கு கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக பல புகார்கள் வந்த நிலையில் இந்த புகார் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.