ரூ.15 கோடி வாங்கியதாக ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது. அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் நடிகர் ஆர்கே சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ் ரூபாய் 15 கோடி வாங்கியது அம்பலமாகி உள்ளது. மேலும் 500 முகவர்களுக்கு சம்மன் அனுப்ப பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இந்த மோசடியில் 800 கோடி ரூபாய் வசூலித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளன. நடிகர் ஆர்கே சுரேஷ் ஐந்து மாதங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் சென்னை வந்தவுடன் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது